உலக வங்கியின் புதிய நாட்டு வருவாய் வகைப்பாட்டின்படி, இலங்கை அதிகாரப்பூர்வமாக ‘உயர் நடுத்தர வருவாய்’ (Upper-Middle-Income) கொண்ட பொருளாதார நாடாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று மீண்டு வருவதை உணர்த்தும் ஒரு முக்கிய அடையாளமாக இந்த மைல்கல் பார்க்கப்படுகிறது.
உலக வங்கி நாடுகளின் பொருளாதார நிலையை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது:
உயர் வருவாய் (High Income)
உயர் நடுத்தர வருவாய் (Upper Middle Income)
கீழ் நடுத்தர வருவாய் (Lower Middle Income)
குறைந்த வருவாய் (Low Income)
உலக வங்கியின் மேம்பாட்டுத் தரவுக் குழுவினால் (Development Data Group) வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வகைப்பாடானது, ஒரு நாட்டின் தலா மொத்த தேசிய வருவாய் (GNI per capita) மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பொருளாதார அந்தஸ்து எதிர்வரும் ஜூன் 2027 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.