போலீஸ் குறித்து QR குறியீடு மூலம் கருத்து தெரிவிக்க புதிய டிஜிட்டல் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2026 (வெள்ளிக்கிழமை)
இலங்கை காவல்துறை, நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளை எளிதாக சமர்ப்பிக்கக்கூடிய புதிய QR குறியீட்டு (QR Code) அடிப்படையிலான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Sri Lanka Police Community Feedback Portal” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முறைமையின் மூலம், காவல் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டை கைபேசி மூலம் ஸ்கேன் செய்து நேரடியாக இணைய தளத்திற்குள் நுழைந்து கருத்துகளை பதிவு செய்ய முடியும்.
இந்த தளத்தில் பயனர்கள்,
முறைப்பாடு (Complaint)
பாராட்டு (Compliment)
கருத்து (Comment)
ஆலோசனை (Suggestion)
ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து, தேவையான சந்தர்ப்பங்களில் தங்களது விவரங்களை வழங்கி, காவல் நிலையத்திற்கு சென்ற காரணம் மற்றும் தொடர்புடைய தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.