அன்னை மடியில்- 07/12/1955 ஆழ்கடலின் அடியில்- 15/07/2024
கடந்த 15/07/2024 அதிகாலை ஓமான் நாட்டுக்கு அன்மையில் வீசிய கடற்புயலில் அமிழ்ந்து போன கப்பலில் காணாமற்போன எங்கள் குடும்பத் தலைவன் அப்பாசாமி தயாநிதி அவர்களுடைய ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு எதிர்வரும் 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை மஹாளயபட்ச அட்டமி - நவமி திதியில், காலை 06 மணியளவில் ஊறணி தீர்த்தக்கரையில் கிரியைகள் நடைபெற்று, தொடர்ந்து வல்வெட்டிதுறை நெடியகாடு “கண்பதி மஹால்” மண்டபத்தில் பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
அத்தருணம் உறவுகள் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு எமது குடும்பத் தலைவனின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நேரில் வருகை தந்தும் தொலைபேசி அழைப்பிக்கள் மூலமாகவும் ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
அப்பாசாமி தயாநிதி குடும்பத்தினர்,
இல 1 காட்டுவளவு, வல்வெட்டித்துறை.
மனைவி : 0094763780469
மகன் செந்தூரன் : 00447846934632
மகன் கவிராஜ் : 0094703527826 / 0064221375690
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.