வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்தும் மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டித் திருவிழா 2023 சற்று முன்னர் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது.
வல்வை விக்னேஷ்வரா சணசமூக தலைவர் திரு.மோ.சிவமயம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு,மோ செல்வச்சிவம் (நிலையத்தின்,கழகத்தின் ஆதி மூத்த உறுப்பினர்), திருமதி சோதிநாராயணசாமி (பரஞ்சோதி அப்பா) பார்வதி தேவி(நிலையத்தின்,கழகத்தின் ஆதி மூத்த உறுப்பினர்) அவர்களும், சிறப்பு விருந்தினாராக Mr.K.M.A.K.Bandara(Assistant Superintendent of Poloce, KKS District III) அவர்களும், திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி(பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை)அவர்களும்), திரு.M.K சிவாஜிலிங்கம் (முன்னாள் பாராளுமன்றம், வடமாகாண சபை உறுப்பினர்) அவர்களும், திரு இராமசந்திரன் சுரேன் (தவிசாளர்,வல்வெட்டித்துறை நகரசபை)அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
பட்டப் போட்டியினைத் தொடர்ந்து கல்விச் சாதனையாளர்கள் கௌரவிற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.