வல்வை முத்துமாரியம்மன் புதிய கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது.
இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது. நிகழ்வில் வல்வை முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபையினருடன் அயலிலுள்ள ஆலயங்களின் நிர்வாகசபை அங்கத்தினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.M .K சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட கல்யாண மண்டபம் வல்வை அம்மன் கோவிலின் வடக்கு வீதியில், அம்மன் கோவில் மின்சார அறைக்கு அருகாமையில், பழைய தபாற்கந்தோர் இயங்கிய இடத்தில் அமையவுள்ளது குறிபிடத்தக்கது.
கல்யாண மண்டபத்தைப் பூர்த்தியாக்க சுமார் 2 கோடி (இலங்கை ரூபாய்கள்) தேவைப்படும் என எதிர்பார்க்கபடுவதாக வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையின் இதுசம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவித்தலானது எமது இணையதளத்தின் 'அறிவித்தல்கள்' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.