வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இந்த போட்டிகள் 14 வயதுப் பிரிவு , 16 வயதுப் பிரிவு , 18 வயதுப் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை சிதம்பராக்கல்லூரி, கம்பர்மலை இந்து தமிழ்கலவன் பாடசாலை ,தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலையம் ஆகிய பாடசாலைகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன.
இன்று காலை நடைபெற்ற முதலாவது போட்டியில் (14 வயதுப் பிரிவு) தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் அல்வாய் வடக்கு மகா வித்தியாலையத்துடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்று போட்டியானது சமநிலையில் முடிவடைந்தது. இந்த போட்டியானது இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை நெல்லியடி மத்திய மகாவித்தியாலையத்துடன் மோதியது. (14 வயது பிரிவு).இப்போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் வெற்றி பெற்றது.
16வயது பிரிவு சுற்றுப்போட்டியில் வல்வை சிவகுரு வித்தியாசாலை கரவெட்டி விக்னேஸ்வரா பாடசாலையுடன் மோதியது. இப்போட்டியில் கரவெட்டி விக்னேஸ்வரா பாடசாலை 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இந்த போட்டி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேற்படி போட்டிகளானது நெல்லியடி மத்திய மகா வித்தியாலைய மைதானம், இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம், மற்றும் கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானம் ஆகிய மூன்று மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டிகள் இன்று மாலையும் நடைபெற்றன, நாளையும் இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.