சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள வட கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலையைத் தொடர்ந்து யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில் நேற்று முன்தினத்திலிருந்து இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் பல இடங்களில் தொடந்தும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், கரையோரப் பிரதேசங்களில் பலத்த காற்று வீசுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தொண்டைமானாற்றுப் பிரதேசத்தில் நேற்று மாலை கடும்மழை பெய்ததுடன், இன்று வல்வெட்டிதுறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தொடந்து வானம் மேக மூட்டத்துடன் இருப்பதுடன், லேசான மழை பெய்து வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இலங்கை வளிமண்டளவியல் திணைக்கள நிலையத்தின் தகவலின் படி இலங்கையின் வட பகுதியில் பரவலாக தொடர்ந்து அசாதாரண காலநிலை சில நாடகள் வரை நீடிக்கலாம் எனத் தெரியவருகின்றது.
அதிக விளை நிலங்களைக் கொண்டுள்ள யாழ் தீபகற்பத்தில், பயிர்ச்செய்கையானது கிணறுகள் மூலம் பெறப்படும் மழை நீரை அடிப்படையாகக் கொண்டே செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சிக் காலநிலையானது ஐப்பசி மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை நீடிப்பதும், இதனால் வங்காள விரிகுடா, தென் சீனக் கடல், தாய்வான் நீரிணை, கிழக்கு சீனக் கடல் ஆகியவை தாக்கத்திற்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.