வல்வை விளையாட்டுக்கழகத்தினால் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று மாலை வல்வை பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த சுற்றுப்போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம், சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம், ரேவடி விளையாட்டுக்கழகம், நேதாஜி விளையாட்டுக்கழகம், தீருவில் விளையாட்டுக்கழகம், உதயசூரியன் விளையாட்டுக்கழகம் ஆகிய 6 கழகங்கள் பங்குபற்றின.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இரண்டாவதாக நடைபெற்ற அறையிறுதியாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 7:2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதியாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 5: 4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சிறந்த வீரராக செல்வன் பிரசாந்துக்கும் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்), சிறந்த கோல்காப்பாளராக செல்வன் அன்புவிற்கும் (சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்) விருது வழங்கப்பட்டது.
வல்வை அணியினை தெரிவுசெய்யும் நோக்குடன் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று வல்வை பொது விளையாட்டரங்கில் நடாத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.