தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2013 (புதன்கிழமை)
நடைபெற்று வரும் கந்தசஷ்டி விரத காலத்தையொட்டி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் தினமும் இடம்பெற்றுவருகின்றன. சந்நிதி கோயிலில் தினமும் மாலை மணிக்கு நடைபெறும் கந்தசஷ்டி பூசை முடிவுற்ற பின்னர் இச்சொற்பொழிவுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் "திரு அவதாரம்" என்னும் தலைப்பிலும், நேற்று செவ்வாய் கிழமை "திருவிளையாடல்" என்னும் தலைப்பிலும் நடைபெற்ற சொற்பொழிவுகளின் வரிசையில் இன்று புதன் கிழமை "சூரசம்ன்ஹாரம்" என்னும் தலைப்பிலும், நாளை வியாழக்கிழமை "தெய்வயானை திருமணம்" என்னும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. சொற்பொழிவை இரா.செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தி வருகின்றார்.
தொண்டைமானாறு ஆச்சிரமத்துடன் தொடர்புடைய எமது முந்திய செய்திகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.