ஹம்பாந்தோட்டையின் துறைமுகம், விமானநிலையம் மற்றும் சினிமாக் கலைக்கூடங்கள், அனுஷ்கா நடிக்கும் ஹிந்தி திரைப்படம் ஒன்றும் இங்கு படமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2013 (புதன்கிழமை)
தற்பொழுது இலங்கையில் அதிகம் பேசப்பட்டுவரும் விடயங்களில் ஹம்பாந்தோட்டை நகரின் கட்டுமானங்களும் ஒன்றாகும். துறைமுகம், விமானநிலையம் மற்றும் சினிமாக் கலைக்கூடம் மற்றும் பரந்த வீதிகள் என்பன இவற்றில் குறிப்பிடக்கூடியனவாகும்.
அண்மையில் எம்மால் இங்கு சென்று எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம். இவற்றின் மேலதிக படங்களை ‘Tourist Places of Southern Srilanka’ என்னும் புதிய பகுதியில் இணைத்துள்ளோம்.
மேலும் தற்பொழுது இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள சினிமாக் கலைக்கூடத்தில் (Cinima Studio) பிரபல தென்னிந்திய நடிகை அனுஷ்கா நடிக்கும் ஹிந்தி திரைப்படம் ஒன்று இங்கு திரைப்படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சினிமாக் கலைக்கூடம்
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல ராஜபக்ஷ பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் பாதை மற்றும் விமான நிலையம்
(மத்தல ராஜபக்ஷ பன்னாட்டு விமான நிலையம் - Mattala rajapaksa International airport - මත්තල රාජපක්ෂ ජාත්යන්තර ගුවන්තොටුපළළ)
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ துறைமுகத்திற்கு செல்லும் பாதை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம்
மஹிந்த ராஜபக்ஸ துறைமுகம் - Hambantota Magampura Port - හම්බන්තොට මාගම්පුර වරාය
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.