புயலாக மாறவுள்ள வங்காள விரிகுடாவின் தாழமுக்கம், வட தமிழகத்தில் அதிக சேதங்களை உண்டு பண்ணலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2013 (புதன்கிழமை)
நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் புயலாகி மாறி முதலில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு – தென் மேற்குத் திசையில் நகர்ந்து தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடையேயான பகுதியினூடு நாளை இரவு கடக்கவுள்ளது.
தற்பொழுது தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்குத் திசையில் சுமார் 200 கடல் மைல்கள் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் (depression) இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புயலாக (Cyclonic Storm) மாறவுள்ளது. அத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும் புயலாக (Severe cyclonic storm) மாறி சென்னைக்கும் ஆந்திராவின் கவாலிப் (Kavali) பகுதிக்கு அண்மையில் உள்ள ஒங்கோல் (Ongole) பகுதியைத் தாக்கவுள்ளது
இத்தாழமுக்கமானது வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள 4 ஆவது தாழமுக்கம் என்பது குறிப்பிடத்தக்து.
இப்புயலினால் யாழ் தீபகற்பத்துக்கு நேரடியாக எதுவித பாதிப்புக்கள் இல்லை. ஆனாலும் தமிழகத்தின் வட பகுதியில் அதிக சேதங்களை விளைவிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புயலின் தற்போதைய செய்மதிப்படம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.