வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வழக்கு, வல்வை நகரசபைக்கு சாதமாகத் தீர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2013 (புதன்கிழமை)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் (Point Pedro Majestic Court) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களின் முடிவில் வழக்கானது, வழக்கு எண் பிரிவு 66 ற்க்கு அமைய தள்ளுபடி செய்யப்பட்டு வல்வை நகரசபைக்கு சாதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வல்வை நகரசபை வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது.
இன்று காலை நடைபெற்றிருந்த இந்த வழக்கில் நகரசபை தரப்பில் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினருமான திரு.M.K. சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் மற்றும் வல்வை நகரசபை உப தலைவர் திரு.சதீஸ் ஆகியோரும் எதிர்த்தரப்பில் பயங்கரவாதத் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரும் ஆஜராகியிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களுக்கும் செவிமடுத்திருந்த நீதிபதி திருமதி சிறிநிதி நந்தகுமார் அவர்கள், பயங்கரவாதத் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாகவும், விடுதலைப் புலிகள் முன்னர் பாவித்திருந்த காணிகள் இராணுவத்துக்கே சொந்தம் என்று அரச சட்டத்தில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி, வழக்கை வல்வை நகரசபைக்கு சாதமாகக் கூறி தள்ளுபடி செய்துள்ளார். மேலும் வல்வை நகரசபை தீருவில் பொதுப் பூங்காவினுள் தொடர்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.