வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தால் நடாத்தப்பட்ட நல்லொழுக்கப் போட்டிகளில் சிவகுரு, வல்வை
மகளிர் பாடசாலை மாணவர்கள் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2013 (வியாழக்கிழமை)
வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தால், சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு, வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட நல்லொழுக்கப் போட்டிகளில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மற்றும் , வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப பிரிவில் பேச்சுப்போட்டியில் செல்வன் வெ.அருட்குமரன் (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்)
கீழ் பிரிவில் கட்டுரைப்போட்டியில் செல்வி ஆ.அனுசியா (வல்வை சிவகுரு வித்தியாசாலை)
கீழ் பிரிவில் கவிதைப்போட்டியில் செல்வி ச.அஜந்தினி (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்)
மத்திய பிரிவில் கட்டுரைப்போட்டியில் செல்வி ம.கிரிசாந்தி (வல்வை சிவகுரு வித்தியாசாலை)
மேற்பிரிவில் பேச்சுப்போட்டியில் செல்வி ஆ.தமிழினி (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) ஆகிய மாணவர்களே வெற்றிபெற்றுத் தெரிவானவர்களாவர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.