நேற்று வல்வையில் அகால மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம்
கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2013 (வியாழக்கிழமை)
நேற்று வல்வெட்டிதுறைச் சந்தியில் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில் திருத்த வேலைகள் செய்து கொண்டிருந்தபொழுது, எதிர்பாராத விதமாக கட்டடப் பகுதி ஒன்று இடிந்து விழுந்ததில் மரணமடைந்தவரின் உடல் உறவினர்களிடம் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேத பரிசோதனை வல்வை ஊரணி ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் வல்வை சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள Customs ஒழுங்கையில் உள்ள மாடி வீடு ஒன்றினில் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தில் மரணமானவரின் பெயர் கந்தையா விஜி, வயது 28 என அறியப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையைச் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.