தேசிய மட்டத்தில் யாழ்ப்பாண உயர் தொழில் நுட்ப நிறுவனம் சார்பாக வல்வை மாணவன் மயூரன் அசாத்திய சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2013 (சனிக்கிழமை)
இலங்கை உயர் கல்வி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றிருந்தது.
இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண உயர் தொழில் நுட்ப நிறுவனம் (Advanced Technological Institute, Jaffna -ATI) சார்பாக போட்டியில் பங்குபற்றியிருந்த, யாழ்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வன் மகாலிங்கம் மயூரன் குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும், 400m ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும், 4x100m அஞ்சல் ஓட்டம் மற்றும் 4x400m அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவைகளைத் தொடர்ந்து கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம் ஆகிய போட்டிகளிலும் பங்குபற்றி 3 ஆம் இடத்தைப் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
மேற்குறிப்பிட்ட போட்டிகளில் 17 உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண உயர் தொழில் நுட்ப நிறுவனம் தேசிய அளவில் 2 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
M.Mayooran (Sri Lanka)
Posted Date: November 26, 2013 at 06:14
Thanks Sivanesan Sir.
Capt. Sivanesan (Sri Lanka)
Posted Date: November 24, 2013 at 11:06
Well done Mayooran. Congratulations...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.