வங்கக் கடலில் மீண்டும் கடும் புயல், லேஹார் (Lehar) 29 ஆம் திகதி ஆந்திராவைக் கடக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2013 (திங்கட்கிழமை)
நேற்று இலங்கைக்கு கிழக்கேயுள்ள, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் (Andaman & Nicobar Islands) தீவுகளுக்கு கிழக்கேயுள்ள அந்தமான் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக மாறி இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளைக் கடந்து (Port Blair க்கு அருகாமையில்) தற்பொழுது வங்காள விரிகுடாவிற்குள் பிரவேசித்துள்ளது.
தற்பொழுது சுமார் 10 கடல் மைல்கள் வேகத்தில், மேற்கு - வட மேற்குத் திசையில் நகரும் இந்தப் புயல் எதிர்வரும் 29 ஆம் திகதி அளவில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைக் கடக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புயல் வகைகளில், தரம் 3 ஐ (very severe cyclone) இப்புயல் லேஹார் (Lehar) யை அடையவுள்ளது.
இப்புயல் லேஹார் (Cyclone Lehar) வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள 5 ஆவது புயல் என்பது, கடந்த 2 மாதங்களில் ஏற்படுள்ள 3 ஆவது புயல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் புயல் பகலின் (Pahilin) மற்றும் சில நாட்கள் முன்னர் புயல் ஹெலனும் (Helen) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.