அரச வர்த்தமானி, தினகரன் நாளிதழ் மற்றும் உதயன் நாளிதழ்யில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை சுருக்கமாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் VEDA நிர்வாகிகள் விபரங்களைத் தொகுத்துள்ளனர்.
இத்துடன் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன இதில் அடங்குகின்றன.
அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் (25.11.2013)
1. அரசாங்க சேவை ஆணைக்குழு
முடிவுத் திகதி – 2013.12.17 வர்த்தமானி
அரச கரும மொழிகள் திணைக்களத்தில் மொழி ஆய்வுகூட கண்காணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகமைகள்:-
க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கில மொழியில் அதிவிசேட சித்தி ஒன்றினைப் பெற்றிருத்தல் அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் ஆங்கில மொழியில் சாதாரண சித்தி ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஏதாவதொரு மொழியினை ஒரு பாடமாகக் கொண்ட பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்.
சம்பளம் - ரூபா 20,030 - 11 x 365 - 18 x 500 - ரூபா 33,045 [MN-7-2006 (A)]
மத்திய மாகாண சபை அலுவலர் தரம் -III பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகமைகள்:-
பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகம் ஒன்றிலிருந்து சட்டத்தரணி பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். இலங்கை சட்ட அறிஞராக நீதிமன்ற கடமைகளில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்.
சம்பளம் – ரூபா( 22935 - 10 x 645 x 8 x 790 – 17 x 1050 – 5355)
காரைநகர் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பதவிகள்
01. காரியாலய காரிய சகாயர் - III
02. நூலக பரிசாரகர் - III
03. சேவைத் தொழிலாளி - III
04. சுகாதார தொழிலாளி - III
கல்வித் தகமைகள்:-
I)கல்விப்பொது தராதரப்பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் விசேட சித்திகள் இரண்டு உடன் ஆறு விடயங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் – PL -1-2006-A (11730-10x120-130x10-145x10-160x12-17600)
05. ஆயுள் வேத மருந்து கொடுப்பவர்
06. மின்னிணைப்பாளர்.
கல்வித் தகமைகள்:-
I) கல்விப்பொது தராதரப்பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் விசேட சித்திகள் இரண்டு உடன் ஆறு விடயங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
II) அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் கல்வி நிறுவனத்துறை சார்ந்த பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் – PL -2-2006-A (12210-10x130-145x10-170x12-18600)
07.சாரதி
கல்வித் தகமைகள்:-
I) கல்விப்பொது தராதரப்பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் விசேட சித்திகள் இரண்டு உடன் ஆறு விடயங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.