வல்வை நகரசபையின் புதிய அங்கத்தவராக சக்திவேல் பிரதீபன் பதவியேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2013 (திங்கட்கிழமை)
வல்வை நகரசபையின் புதிய அங்கத்தவராக, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்த இருந்த செல்வன் சக்திவேல் பிரதீபன் இன்று சமாதான நீதவான் திரு,சூ. சே குலநாயகம் அவர்களின் தலைமையில் பதவியேற்றார். இவ்வைபவம் இன்று பிற்பகல் 12:15 மணியளவில் நடைபெற்றது.
இப்புதிய அங்கத்தவர் தெரிவு முன்னாள் நகரசபை உறுப்பினரான திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராகத் தெரிவானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தைத் தொடர்ந்தே நிகழ்வுற்றது. மேலும் இத்தெரிவானது, சம்பந்தப்பட்ட கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேர்தல் திணைக்களத்தின் முடிவுக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளது.
9 அங்கத்தவர்கள் கொண்ட வல்வை நகரசபையில் 7 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இருவர் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியையும் பிரதிநிதிப்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.