வல்வையின் பிரபல தொழில் அதிபர் பாலசுப்பிரமணியம் (ராசா) காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டிதுறையின் முன்னணித் தொழில் அதிபர்களில் ஒருவரான, அன்னை முத்துமாரியம்மன் ரவல்ஸ் உரிமையாளரான திரு ஆறுமுகசாமி பாலசுப்பிரமணியம் (ராசா) இன்று கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 50. கடந்த சில நாட்களாக கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வல்வையின் முன்னணி தொழில் அதிபரான திரு.பாலசுப்பிரமணியம் (ராசா) அன்னை முத்துமாரியம்மன் ரவல்ஸ் என்னும் பெயரில் 4 சொகுசு பஸ் சேவைகளை வல்வெட்டிதுறைக்கும் கொழும்பிற்கும் இடையில் நடாத்திவந்திருந்தார்.
கொழும்பின் கொட்டாஞ்சேனைப்பகுதியில் வசித்து வந்த இவர், அவ்வப்போது வல்வெட்டித்துறையில் தங்கியிருந்து ஊரின் வளர்ச்சிக்கு கணிசமானளவு பங்கேற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.