தொழிலதிபர் ராசாவின் உடல் வல்வையில் தகனம் செய்யப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2013 (வெள்ளிக்கிழமை)
நேற்று கொழும்பில் காலமான அன்னை முத்துமாரியம்மன் ரவல்ஸ் உரிமையாளரான திரு ஆறுமுகசாமி பாலசுப்ரமணியம் (ராசா) அவர்களின் இறுதிக் கிரியைகள், அவரின் பிறந்த ஊரான வல்வெட்டிதுறையில் நாளை மறுதினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தற்பொழுது அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பூதவுடல் கொழும்பிலுருந்து வல்வெட்டித்துறைக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு நாளை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை, 08.12.2013 அன்று ஈமக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.