மார்கழி மாதம் யாழ்ப்பாணத்தின் மனதுக்கு இதமான மாதமாகக் கருதப்படுகின்றது. பாடசாலை விடுமுறை, யாழ்ப்பாணம் மழை பெறும் காலம் அத்துடன் இதமான வெப்பநிலையை உணரும் காலம். சிறார்களின் பட்டக் காலம், இவற்றுக்கு மேலாக பிள்ளையார் வழிபாடு, திருவெம்பாவை வழிபாடு, திருவாதிரை திருநாள், அதிகாலை வீதிப் பஜனை என இந்துக்களின் தொடர் ஆன்மீக நிகழ்வுகள், அத்துடன் கிறிஸ்தவர்களின் பிரதான பண்டிகையான நத்தார் பண்டிகை, மற்றும் எல்லோருக்கும் பொதுவான புதுவருடம் ஏற்பாடுகள் என நீளுகின்றது மார்கழியின் மகத்துவங்கள்.
இதனையொட்டி மார்கழி மாதத்தின் இந்துக்களின் ஆன்மீக நிகழ்வுகளை கீழே படமிடுகின்றார் கட்டுரையாளர் வ.ஆ.அதிரூபசிங்கம்
மார்கழி மாத இறுதிநாளில் அவருக்கு ஆக்கிடுமே விசேட பூசை
பட்சணங்கள் பல படைத்து நின்று பக்தியுடன் வழிபடுவர்
கேட்ட வரம் தந்திடுவர் பிள்ளையார் மனங்கொண்டு.
சத்திய மனங்கொண்டு திருவெம்பாவை வழிபாடு
மார்கழி மாத திருவாதிரை முன் அமைந்த நாள்கள் ஒன்பதிலும் ஆகிடுமே சக்திக்காய்த் திருவெம்பாவை பூசை வழிபாடுகள் ஆலயங்களில் சக்திக்காய் விசேட பூசை வழிபாடுகள் பக்தனை பரவசப்படுத்தும் பாவைப் பாடல்களும் உள்ளடங்க பாவை நோன்பை மனங்கொண்டு தன்மையர் முனைந்திடுவர் நோன்பிருக்க பராயம் 5 முதல் 12க்கு உள்ளான கன்னியர்கள் பரமன் தாழ் மனங்கொண்டு நோன்பினை மேற்கொள்வர் வைகறைப் பொழுதினிலே துயில் நீங்கி தாம் எழுந்து ஒருவரோடு ஒருவர் தாமும் சென்று தோழியரை துயில் எழுப்புவர்
ஆளுடையான் அடிகளின் அற்புதமான பாடல் பாவைப் பாடல்
தோழியர் கன்னியரை எழுப்பிடும் பாங்கு ஆணவ மல உறக்கத்தில் கிடந்தது அழுந்தும் ஆன்மாக்கள் உறக்க நிலை தாம் நீங்கி இறையருள் பெற்று உய்ந்திட தோழியராய் அங்கு வந்து கூவி துயிலேழும்பும் தன்மை சக்தியின் பேரருளின் இயல்பினை உணர்த்திடுமே
ஆதிரையான் – திருவாதிரை திருநாள்
மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்பு கொடுத்திடுமே ஆதிரையானுக்கு அமைந்த திருவாதிரை திருநாளும் திருவாதிரை திருநாளில் பஞ்ச கிரித்திக வடிவினராம் நடராசருக்கு அமைந்திடும் விசேட அபிஷேடக ஆராதனை அபிஷேட நிகழ்வின் பின்பு அமைந்திடும் ஆருத்திரா தரிசனம் திருக்கார்த்திகை திருநாளில் வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் ஆலயத்தில் கூத்தப்பிரான் ஆடும் ஆனந்தக் தாண்டவத்தை கண்டு ஆனந்திக்க கண்டய்ந்திட அம்மவர்கள் அலையென மோதிடுவர் வைத்தீஸ்வரன் ஆலயத்தின் ஆனந்த்க் கூத்தினைக் கண்டு நாமும் எலாம் ஆனந்த வெள்ளத்தின் அமிழ்ந்திடுவோம் திருநாளாம் இத்தினத்தில்
அதிகாலை வீதிப் பஜனை
மார்கழி மாத முதல் நாள் தொடக்கி இறுதி நாள் வரை
அதிகாலை நேரமது வாத்தியங்கள் இசை தெளிக்க
இசையால் செவிகள் நிறைந்து வழிந்திட
எம்மூரின் மைந்தர்கள் பலர் ஒன்று சேர்ந்து
பஜனை நிகழ்வினை நிகழ்ந்திடுவர் எம் வீதிகளில்
பக்தி உணர்வினை உளம் கொண்டு "ஏலோ ரெம்பாவாய்"
பாடி வந்து எம்மை துயில் எழுப்புவர் இறையருள் பெற்றிட
வீதியில் பஜனையில் இப்பாடல் அடிகள் குறிப்பிடத்தக்கன.
மார்கழி மாத நாள் முழுதும் பிள்ளையார் வழிபாடு பாவை நோன்புக்காய் திருவெம்பாவை பாடல்களும் பூசைகளும் ஆதிரையான் புகழ்பாடி ஆனந்த தாண்டவம் ஊரின் மைந்தர்களின் வீதிப் பஜனைகள் இத்தனையும் மார்கழி மாதத்தின் மகத்துவங்கள் !
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.