Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஹரிதாஸ் - A brave seaman from VVT

பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014 (சனிக்கிழமை)
சுமார் 12 வருடங்கள் முன்பாக, கார்த்திகை மாதமாக இருக்கக்கூடும். தென்சீனக்கடலில் பழைய சரக்குக் கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருக்கின்றது. கம்போடியாவிற்கு வடகிழக்குத் திசையில் ஒரு சூறாவளி. சூறாவளியின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் சேதமாகி மெல்ல மெல்ல தாழத் தொடங்குகின்றது.
 
கப்பல் தலைவனால் கப்பலைவிட்டு நிரந்தரமாகாவே வெளியேறும் உத்தரவு (Abandon ship order) வழங்கப்படுகின்றது. ஒரு பக்கத்து உயிர் காக்கும் படகில் (Lifeboat) கப்பலின் பாதி மாலுமிகள் செல்ல, அது அடுத்த  நொடியில்
கடலுடன் சங்கமம்.
 
ஏனையவர்கள் புத்திசாதுரியமாக 2 உயிர் காக்கும் மிதவைகளில் (Life raft) தப்பி, கப்பலை விட்டு வெளியேறுகின்றார்கள். Titanic கப்பல் போல், குறித்த கப்பல் இவர்களின் கண் முன்னாலேயே கடலுக்குள் மூழ்கிவிடுகின்றது.
 
கடலுக்குள் பாயும் பொழுது தத்தளித்த சில சகமாலுமிகளை ஒரு 6 அடி உயரமுள்ள மாலுமி 2 உயிர் காக்கும் மிதவைகளினுள் (Life raft) கொண்டுசெல்கின்றான். சூறாவளிக் காற்று, அதுதான் பேய் காற்று, குளிர், கடும் மழை, கடும் அலை - உயிர் காக்கும் மிதவைகள் சுழலத்தொடங்குகின்றன.
 
ஒரு சில மணித்தியாலங்களில் ஒரு உயிர் காக்கும் மிதவை பெருங்கடலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மாயமாகின்றது. அதில் இருந்த ஐவரில் இருவரை அதே 6 அடி உயரமுள்ள மாலுமி காப்பாற்றி தனது உயிர்காக்கும் மிதவைக்குள் கொண்டுவருகின்றான்.
 
இறுதியாக மிஞ்சியிருந்த ஒரேயொரு மிதவைக்குள் 7 பேர். பெருங்கடலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இந்த மிதவையும் பெரும் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இரவும் தாண்டுகின்றது. கடலின் கடும் கொந்தளிப்பால், மிதவை தலைகீழாய் நிலையெடுத்துக்கொண்டிருக்க, மிதவையை நிமித்தி சக மாலுமிகளின் உயிர்களை காத்துக்கொண்டிருந்தான் அந்த 6 அடி உயரமுள்ள மாலுமி. ஆனாலும் மூவரைக் காவுகொள்கின்றது கடல்.
 
சுமார் 16 மணி நேர போராட்டத்தின் பின், அவ்வழியால் வந்து கொண்டிருந்த பிரபல கப்பல் ஸ்தாபனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்றால் மிஞ்சியிருந்த நால்வரும் காப்பாற்றப்பட்டு இந்தோனிசியா கொண்டுவரப்படுகின்றார்கள்.
 
இறுதியாக மிஞ்சியிருந்த மிதவையையும் சக 3 மாலுமிகளையும் தக்க (தப்ப) வைத்த அந்த 6 அடி உயரமுள்ள மாலுமி  வேறு யாருமல்ல, நேற்று முன்தினம் வல்வையில் அகால மரணமடைந்துள்ள ஹரிதாஸ் தான்.
 
வெறும் 2 நிமிடத்தில் வாசிக்கக் கூடிய கதை. Titanic கப்பல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஹரிதாஸ் உடைய இந்த வீர நிகழ்வை யாரும் வல்வையில் கூட பெரிதாக அறிந்திருக்கவில்லை, ஆவணப்படுத்தியுமிருக்கவில்லை.
 
வல்வை பல வரலாறுகளைக் கொண்டுள்ளது என பழையதைத் தேடும் நாம், எம்முடனேயே உள்ள பலவற்றை அறியாமல் இழந்துவருகின்றோம். அதில் ஒன்று தான் ஹரிதாஸ்.
 
ஹரிதாஸ் – A brave seaman from VVT என்று தான் ஆங்கிலப் பத்திரிகைகள் அன்று தலையங்கம் தீட்டியிருக்கும், ஹரிதாஸ் ஒரு ஆங்கிலேயனாக இருந்திருந்தால்.
 
(மேலே குறிப்பிட்டுள்ள சிறு கட்டுரையில் இலக்கங்கள் மிகத் துல்லியமானவையல்ல, ஹரிதாஸ் உயரம் உட்பட)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
vasu nehru RADIO OFFICER/ENG.TECH (United Kingdom) Posted Date: January 20, 2014 at 17:36 
சோழர் கடல்படையின் வீரமறவர்கள் வாழும் வல்வெட்டித்துறையி்ல், வரலாற்று காலத்தில் இருந்து இன்று வரை வீரவரலாற்றின் சுவடுகள் தொடர்கின்றது...........

வல்வை மக்களுக்கு, கடலும் காற்றும் இவர்கள் தோழர்கள். வானும் நட்சத்திரமும்
இவர்கள் வழிகாட்டிகள். மொத்தத்தில் கடல் இவர்களுக்கு குளமாகியது!

வல்வை மண்ணின் மைந்தன் ஹரிதாஸ் கடலில் வீரம் படைத்தான். போற்றுவோம்
அவர் வீரத்தினை. இன்றைய நிகழ்வுகள் நாளைய சரித்திரம்!

வல்வை மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்த வேண்டும்.

R.Satkunathas (Srilanka) Posted Date: January 06, 2014 at 05:33 
Me too heard the above mentioned sea experience, by verbally of Mr. Haridas, and as he told, the vessel was carried logs and the cause of incident is broken of logs lashing by heavy storm.

capt s.sivanesan (srilanka) Posted Date: January 06, 2014 at 00:23 
my heartfelt condolences to harithas and family. my sincere gratitude for valvettithurai.org for bringing into view the brave deeds and courage endured by harithas to save his fellow seaman in a life raft during a worst cyclonic storm in the most dangerous south china sea.

like harithas there are so many persons of high potentials who are not known to the people even now. I
hope that ,this situation will change gradually in the near future.

sivanesan

Capt.N.Kalainesan (Sri Lanka) Posted Date: January 05, 2014 at 16:50 
It should be documented in our VVT history...If possible some body provide more details like ship name, year of incident and any other evidence etc. Will take arrangement to put in our record. Any way salute to Mr. Harithaas.

k.premkumar (london) Posted Date: January 04, 2014 at 22:00 
Valvettithurai have lost a BRAVE SEAMAN that Mr.Tharmasundaram Harithas!
Our Heartfelt condolences to his family in this difficult time.

Thanks to your web team, for bring this hidden and unforgettable story about Mr.Harithas to the world.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
விழிநீர் சுமந்து,நன்றியுடன் வழியனுப்புகின்றோம் சென்றுவா ஆசானே.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் சிதம்பரக் கல்லூரி உப அதிபர் குழந்தைவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஹாட்லி கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் ஆலய நித்திய பூசை நேரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2025 (சனிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சந்திரவதனா ஞானச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
ஆசிரிய ஆளுமையொன்றின் நீங்காத நினைவலைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2025 (புதன்கிழமை)
சந்நிதி கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தானத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2025 (திங்கட்கிழமை)
சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலை கலந்துரையாடல் - கையளிக்கப்பட்ட மகஜரின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2025 (வெள்ளிக்கிழமை)
ஊரணி வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2025 (வெள்ளிக்கிழமை)
அனைத்துலக வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கத்தின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2025 (வியாழக்கிழமை)
மரணஅறிவித்தல் - திரு. சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி ஞானலோஜினிதேவி பரஞ்சோதி (திருத்திய பதிப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2025 (சனிக்கிழமை)
President Anura Kumara Dissanayake visits valvettithutai
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2025 (சனிக்கிழமை)
வல்வையில் இலங்கை ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. வைரமுத்து இராசரெட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்களுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு திறந்துவைப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)
VEDA மார்கழி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2025 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai