நேற்று வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் தற்பொழுது தீவிர தாழமுக்கமாக மாறி (Deep depression) மேற்கு வடமேற்குத் திசையில் தற்பொழுது நகர்ந்து வருகின்றது. இலங்கை நேரப்படி நேற்று இரவு 23.30 மணியளவில் அகலாங்கு 09.20 (வடக்கு) மற்றும் நெட்டாங்கு 82.50 (கிழக்கு) என்னும் பகுதியில் நிலை கொண்டிருந்து தற்பொழுது சுமார் 6 கடல் மைல்கள் வேகத்தில் நகரும் இந்த தீவிர தாழமுக்கம் இன்று மாலை இலங்கையின் வடகிழக்கு கரையோரப் பகுதிகளான சாலை மற்றும் முல்லைதீவுக்கிடைப்பட்ட பகுதியைக்கடக்கவுள்ளது.
இந்த தீவிர தாழமுக்கம் காரணமாக காற்று மணிக்கு சுமார் 45 தொடக்கம் 55 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், திடீர் காற்று (Gust wind) 65 Km/h வேகத்திலும் வீசவுள்ளது. இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கவுள்ளதுடன் கடும் மழையும் பெய்யவுள்ளது.
அண்மித்துவரும் தீவிரதாழமுக்கம் எதிர் பார்க்கப்படும் பாதையிலேயே நகர்ந்தால் வடபகுதி குறிப்பாக யாழ்பாணம், கிளிநொச்கி மற்றும் முல்லைதீவு பகுதிகளில் குறிப்பிடக்கூடிய சேதங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன.
இது இவ்விதமிருக்க வல்வெட்டித்துறை உட்பட்ட யாழ்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்திருந்தது.
தாழமுக்கம் தொடர்பான Valvettithurai.org அடுத்த செய்தி இன்று பிற்பகல் பிரசுரமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.