தாழமுக்கம் மெதுவாக நகர்வு, இன்று இரவு முல்லைதீவு கரையை கடக்கும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2014 (திங்கட்கிழமை)
நேற்று முன்தினம் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 100 கடல் மைல்கள் தொலைவில் உருவாகி மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்திருந்த தாழமுக்கம் எதிர்வு கூறப்பட்டதைவிட மெதுவாகவே நகர்வுவருகின்றது. இதனால் இது இன்று மாலை அல்லது இரவு முல்லைதீவு கரையை (between latitude 9.00N and 9.50N) கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து இத்தாழமுக்கம் நாளை காலை வலுவடையும் எனவும்
எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு சீரற்ற காலநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
மணிக்கு 45-55 Km/h வேகத்தில் காற்று வீசும் எனவும் இது திடீரென 65 Km/h (Gust wind) வேகத்துக்கு உயரும் எனவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாழமுக்கத்தின்னால் இலங்கையின் வட பகுதியில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.