முல்லைதீவு கரையைக் கடந்தது தாழமுக்கம், இன்னும் 24 மணி நேரத்துக்குள் வலுவிழக்கும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2014 (திங்கட்கிழமை)
நேற்று முன்தினம் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 100 கடல் மைல்கள் தொலைவில் உருவாகியிருந்த புயல் (tropical storm) தீவிர தாழமுக்கமாக (deep depression) மாறி சற்று நேரத்துக்கு முன்னர் முல்லைத்தீவு கரையைக் கடந்துள்ளது. (Between latitude 9.00N and 9.50N)
இது தொடர்ந்து மேற்குத் திசையில் நகர்ந்து இன்னும் 24 மணி நேரத்துக்குள் தாழமுக்கமாக (Low pressure) வலுவிழந்து, அதன் பின்னர் முன்னர் முற்றாக வலுவிழக்கவுள்ளது. ஆனாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு சீரற்ற காலநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
மணிக்கு 40-50 Km/h வேகத்தில் காற்று வீசும் எனவும் இது திடீரென 60 Km/h (Gust wind) வேகத்துக்கு உயரும் எனவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாழமுக்கத்தினால் இலங்கையின் வட பகுதியில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.