அ.மி.த.க பாடசாலைக்கு சந்திரலீலா சிவநேசன் தம்பதிகளின் 50 வது வருட திருமண நாள் நிறைவையொட்டி பிரதிஎடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2014 (திங்கட்கிழமை)
வல்வை அ.மி.த.க பாடசாலைக்கு வல்வெட்டிதுறையைச் சேர்ந்த தற்பொழுது பிரான்சில் (பாரிஸ்) வசிக்கும் சந்திரலீலா சிவநேசன் தம்பதிகளின் 50 ஆவது வருட திருமணநாள் நிறைவையொட்டி ரூபா 1,17,600/- பெறுமதியுடைய அதிநவீன பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo copy machine) ஒன்று இன்று உத்தியோகபூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 10 மணியளவில், குறித்த நலன் விரும்பியின் வேண்டுகோளிற்கிணங்க, குறித்த பிரதி எடுக்கும் இயந்திரம் நலன் விரும்பியின் ஆசிரியர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களால், பாடசாலை அதிபர் திரு.சுப்ரமணியம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் வல்வையில் அமைந்துள்ள அ.மி.த.க பாடசாலையின் மிக அவசரத் தேவையான பிரதி எடுக்கும் இயந்திரத்திற்கான (Photo copy machine) உதவி கோரி, குறித்த பாடசாலை சமூகத்தின் வேண்டுகோள் ஒன்று எமது இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய லண்டனில் உள்ள நலன்விரும்பி ஒருவர் ரூபா 1,17,600/- ஐ குறித்த பாடசாலையின் பிரதி எடுக்கும் இயந்திரத்திற்கென (Xerox machine) எமக்கு அனுப்பியிருந்தார். பிரதி எடுக்கும் இயந்திரம் கடந்த வெள்ளிக்கிழமை எம்மால் வாங்கப்பெற்று கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்டிருந்தபோதும், அதிபரின் வேண்டுகோளிற்ணங்க இன்று பிரதி எடுக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
வல்வையின் கல்வி பால் தனது இளம் பாராயம் முதலே அக்கறை கொண்டுள்ள, கணிசமானளவு மாணவர்களுக்கு , சாதாரணதர மற்றும் உயர்தர கணிதம் கற்பித்திருந்த குறித்த நலன் விரும்பியின் இந்த ஆக்கபூர்வமான முயற்சிக்கு Valvettithurai.org தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் பெரியோர் சந்திரலீலா சிவநேசன் தம்பதிகளையும் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
பெரியோர் சந்திரலீலா சிவநேசன்
பிரதி எடுக்கும் இயந்திரம் கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்ட போது
பிரதி எடுக்கும் இயந்திரம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட போது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.