யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில் Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்லும் மையம் இன்று (21.09.2026) அரியாலையில் திறந்து வைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் செம்மணி- அரியாலை, இலக்கம் 37, இளையதம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள மையத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன் 0772284939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.
பொதுமக்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இந்த மையத்தில் ஒப்படைக்க முடியும். ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் வகை மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு கிலோக் கிராமுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.