வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் கால் இறுதியாட்டங்களின் முதல் நாள் போட்டிகள் இன்று நடைபெற்றன.
முதலாவதாக ஆட்டத்தில் வதிரி டைமண்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் இச் சுற்றுத் தொடரை நடாத்தும் வல்வை விளையாட்டுக் கழகம், கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி யங்கம்பன்ஸ் 2 கோல்களையும், வல்வை 1 கோலினையும் பெற்றிருந்தது.
ஆட்டத்தின் பிற்பாதியில் மிகவும் அபாராமாக விளையாடிய யங்கம்பன்ஸ், அடுத்தடுத்து தொடர்ச்சியாக 4 கோல்களைப் பெற்று வெற்றிபெற்றது. இதனால் வல்வை விளையாட்டுக் கழகம் இந்த சுற்றுப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
sathuryan (Srilanka)
Posted Date: March 05, 2014 at 20:16
in match of valvai vs youngkampans on first half valvai rules the match bcuz they putted first 2 goals wen the first half ends 2 for valvai and 1 for youngkampans from second half only they sets the fire nd made 6 goals
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.