எண்ணைதாங்கிக் கப்பல் Morning Glory இல் 2 வல்வையைச் சேர்ந்த மாலுமிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2014 (வியாழக்கிழமை)
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவினுடைய சிறப்புப் படையணியான நேவி சீல்ஸினால் (US Navy Seals) கையகப்படுத்தப்பட்டுள்ள எண்ணைதாங்கிக் கப்பல் Morning Glory இல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறைந்தது இரண்டு மாலுமிகள் பணிபுரிவதாகத் தெரியவருகின்றது.
உள்ளூர் கிளர்சிகளைக் கொண்டுள்ள லிபியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள Al-Sidra என்னும் துறைமுகத்தில் 37,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணையை (Crude oil) லிபிய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி ஏற்றியதற்காக, லிபிய மற்றும் சைப்ரஸ் அரசாங்கங்களின் வேண்டுகோளிற்கிணங்க இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சைப்ரசிற்கு (Cyprus) தென்கிழக்காக சுமார் 20 கடல் மைல்கல் தூரத்தில் இடம்பெற்ற இந்த கையகப்படுத்தும் சம்பவத்தில் கப்பல் மாலுமிகள் எவருக்கும் எதுவித தீங்கும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.