இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2013 (புதன்கிழமை)
நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வுடலானது இன்று அதிகாலை 6.00 மணியளவில் பருத்தித்துறை முனைக்கடலில் மிதந்ததுள்ளது. வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயிலியதனையிலுள்ள சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் போலீஸ் உத்தியோகத்தவர்கள் பார்வையிட்ட பின்னர், காலை 11 மணியளவில் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.