வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் அனுசரணையுடன் இன்று 09.06.2013 பிற்பகல் 3.30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திரு.பிரேம் அவர்களின் ''கம்பிகளின் மொழி" எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றது.
வல்வைச் சந்தியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இக்கவிதை நூல் வெளியீட்டிற்கு பிரதம விருந்தினராக மேயர் K .C ஜெயக்குமாரா (புனர் வாழ்வு பெற்றவர்களின் சமுக,பொருளாதார மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பதிகாரி) அவர்களும், சிறப்பு விருந்தினராக Dr. மயிலேறும் பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி, வல்வை ஊரணி ஆதார வைத்தியசாலை) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் பிரதம விருந்தினர் மேயர் K .C ஜெயக்குமாரா அவர்கள் ஆற்றிய நீண்ட அரசியல் அற்ற உரை தமிழில் அவரின் உதவியாளரால் மொழி பெயர்க்கப்பட்டது.
இவ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய Dr. மயிலேறும் பெருமாள் குறிப்பிடுகையில் ''சமூகத்தில் கவனிக்கப்படாதுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், மேஜர் ஜெயகுமார போன்றவர்களால் கவனிக்கப்படுவது பாராட்டுக்குரியது'' என்றார்.
சுமார் நூறு வரையானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில், கவிதைத் தொகுப்பின் ஆய்வுரையை பொலிகையூர் சு.க.சிந்துதாசன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
இறுதியாக உரை நிகழ்த்திய கவிதாசிரியர் திரு.பிரேம் அவர்கள், கோ.வல்வையூரான் என புனைப்பெயரிட்டமைக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.