குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 'Star of Vadamaradchi' மென்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
15 ஓவர் கொண்ட இச்சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம், சகல விக்கட்களையும் இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் 13.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன் அடிப்படையில் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி 'Star of Vadamaradchi'
எனும் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியில் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் கோகுலன் 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.