வல்வெட்டித்துறை சந்தைக் கட்டிடத் தொகுதி வரும் ஆண்டின் முதற் பகுதியில் பூர்த்தியடையும்?
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த சித்திரை மாதம் நடைபெற்றிருந்தது.
நகரசபை வட்டாரங்களிலிருந்து valvettithurai.org கிடைத்த தகவல்களின் பிரகாரம், இத்திட்டமானது 2012 ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் அமைவதால், இவ் நிர்மான வேலைகள் விரைவாக முடிக்கப்படவேண்டியுள்ளதாகவும் , திட்டத்தைப் பூர்த்தியாக்க சுமார் 8 மாதங்கள் (சித்திரையிலிருந்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது. இதன்படி சந்தைக் கட்டிடத் தொகுதி கட்டட நிர்மாண வேலைகள் வரும் ஆண்டின் முதற்பகுதியில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை சென் செபஸ்தியார் தேவாலயத்துக்கு முன்பாக, இரு தொகுதிகளாகக் அமைக்கப்பட்டுவரும் இச் சந்தைக் கட்டிடத் தொகுதியின் இடப்பக்கத் தொகுதியின் கீழ் காய்கறிகள் விற்பனைக்குரிய பகுதியும், மேல் தட்டில் கடைதொகுதியும், வலப்பக்கத் தொகுதியின் கீழ், மேல் என இரண்டு பகுதிகளிலும் கடைதொகுதிகள் அமையவுள்ளதாக அறியமுடிகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.