வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரையில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. மாலை சுமார் 05.00 மணியளவில் வேட்டை ஆடுவதற்காக பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய வீதிக்கு சென்று, அங்கு வேட்டை ஆடிய பின் அங்கிருந்து வாலாம்பிகை வைத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து தமது ஆலயத்தை நோக்கி திரும்பினார்.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி பத்து தினங்களாக நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 06.08.2013 அன்று நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.