சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் (திரு.குமார் ஆனந்தன்) பற்றிய விபரங்களின் குறிப்பிடக்கூடிய பெரும் பகுதி எம்மால் (Valvettithurai.org) திரட்டப்பட்டுள்ளன. வல்வையின் நலன் விரும்பி ஒருவரின் உதவி மூலம், ஆழிக்குமரன் ஆனந்தனின் உறவினரிடமிருந்து இவ் விபரங்கள், வாய்மொழி உட்பட்ட பல விடயங்கள், திரட்டப்பட்டுள்ள விபரங்களில் கூடுதலானவை 1962 ஆண்டுக்கு பிற்பட்டவை. இதற்கு முற்பட்ட காலப்பகுதியுடன் தொடர்புடைய ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றிய விபரங்களையும் தொகுக்கும் பணிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இதுவரை திரட்டப்பட்டுள்ள விடயங்கள், விரைவில் உரிய முறையில் எமது இணையதளத்தில் ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுள்ள பகுதியில் பிரசுரிக்கவுள்ளோம்.
மேற்குறிப்பிட்டுள்ள எமது முயற்சி வல்வெட்டித்துறை பற்றிய சகல விடயங்களையும் ஆவணப்படுத்தும் எமது முயற்சியின் ஒரு பகுதியாகும்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.ஆழிக்குமரன் ஆனந்தன் பல கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருப்பதுடன், வேறும்பல கின்னஸ் சாதனைகளுக்காக முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரு.ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றி முழுமையாக, குறிப்பாக அவரின் கின்னஸ் சாதனைகள் தவிர்ந்த இளமைக்கால விடயங்கள் உட்பட, வல்வையர்கள் பலரே அறிந்திருக்கவில்லை என்பதும் ஆனந்தன் அவர்களுக்கு எதுவித நினைவுச் சின்னங்களும் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்ட வேண்டியவொன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ravi (Canada)
Posted Date: October 01, 2013 at 17:03
It is beneficiary to the public if these paper articles can be scanned and published on the internet, DVD and You Tube.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.