கடல் கடந்த உறவினரின் கடிதம் பெறக் கப்பலின் வரவை எதிர்பார்த்திருந்த காலம் காணாமல் கரைந்து போய், ஞாலத்தின் எந்தவொரு மூலையிலும் நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் பார்க்கவும் எவருடனும் பார்த்துப் பேசவும் முடியுமான அறிவியல் யுகத்தில் உலவும் எமக்கு தற்சமயம் இணையத்தளங்களும் மின்னஞ்சலும் இன்றியமையாத விடயங்களாகியுள்ளன.
இவை ஏதுமற்ற வாழ்வைக் கற்பனை செய்யக்கூட முடியாதுள்ளதே யதார்த்தம். அறிவுப் பரிமாற்றம், வர்த்தகம் போன்ற பலவித நோக்கங்களுடன் இயங்கும் இவ்விணையத்தளங்களில், சமூக நலனை, குறிப்பாக எமது பிறந்த மண்ணாம் வல்வெட்டித்துறையின் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி, வர்த்தக நோக்கு ஏதுமின்றி, அயராது, அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் தங்களது இணையத்தளம் ஒரு வருட நிறைவு விழாக் கொண்டாடும் இவ்வமயம் தங்கள் ஆசிரிய பீடத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும,; உலகெங்கும் வாழும் வல்வையர் சார்பில் நன்றியையும் தெரிவிக்க விழைகின்றேன்.
பத்திரிகை ஆசிரியர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்போர் எச்சந்தர்ப்பத்திலும் தமது சொந்த உணர்ச்சிகளுக்கப்பால், (விமர்சனங்கள் தவிர) உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த வகையில், நானறிந்த வரையில், இதுவரையில் இக்குறிக்கோளிலிருந்து பிறழாது இயங்கி வருவது குறித்து மிக மகிழ்ச்சி.
இனிவருங் காலங்களிலும் இவ்வாறே, பொது நலன் மட்டுமே பேணி, எமது ஊரவர்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பாக ஒற்றுமைக்கும் தேவையான விடயங்களைப் பிரசுரிக்க வேண்டுகின்றேன். சிறுவர்களைக் கவரக்கூடிய விடயங்களை உள்ளடக்குவதும் நன்று. இது அவர்களை இணையத்தளத்தின் நன்மை பயக்கும் பகுதிகளையும் நாடத் தூண்டும், பரந்துபட்ட அறிவைப் பெற்றுக் கொள்ள வழி கோலும் என்பது என் அபிப்பிராயம்.
தங்கள் இணையத்தளம்; வளர்ந்து இன்னும் பலப்பல ஆண்டு நிறைவுகளைக் கொண்டாட வாழ்த்தும் அன்பன்,
திருச்சிற்றம்பலம் மகன் யோகசபாபதிப்பிள்ளை
செயலாளர், வல்வை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்-
கொழும்பு
T.Yogsabapathipillai B.Sc. (Eng.) Hons., M.ASHRAE
Engineering Manager
Metropolitan Air Conditioning & Refrigeration (Pvt) Ltd.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.