வல்வெட்டித்துறை.ORG - வாழிய நீ, வரும் விடியல்கள் இவற்றைச் சாத்தியமாக்கட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2021 (சனிக்கிழமை)
வாழியநீ.
வரும்விடியல்கள்இவற்றைச்சாத்தியமாக்கட்டும்
“வல்வையின்குரல்” தாரக மந்திரம், வல்வை, வல்வை நகரசபைக்குட்பட்ட தகவல்கள் மற்றும் அதனைச் சூழ்ந்த பிரதேச செய்திகளோடு, உலகெங்கும் பரந்து வாழும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும், பிற பயன்தரு தகவல்களையும் தாங்கி வருகிறது நம் வல்வெட்டித்துறை.ORG.
பத்தாண்டுகள், பலகோடி எழுத்துக்கள், பல்லாயிராம் சொற்கள், அவை செய்திகளாக, அறிவிப்புகளாக, வரலாற்று மீள்பதிவுகளாக, துணுக்குச்செய்திகளாக, எம்மவரின் அனைத்துச் செயற்பாடுக்களையும் தினமும் தன்னகத்தே உள்வாங்கி தன் பாணியில் தினமும் பதிப்பிக்கின்றது.
வாழ்த்துக்கள்.
இன்றுபோல் உள்ளது, வல்வெட்டித்துறை.ORG முதல் பக்கம் பார்த்தது பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.
செழுமை பெற்றது ORG.
ஒரு செய்தியின் வீச்சு, நற்சமூகத்தினை மேலும் சிறந்த வழியில் தொடர்ந்து செல்ல வழிசமைக்கிறது. இதில் பாராட்டுதல்களும் கண்டனங்களும் அடங்கும். உண்மையின் முன் நடுநிலமை என்பது ஏது? காலம் உண்மையின் வெளிப்பாட்டினை வரையறை செய்கிறது.
ஆரம்ப காலத்தில் பூமிப்பந்தில் பரந்து வாழும் வல்வைமக்களின் அனைத்துச் சம்பவங்களையும் பதிவேற்றிய ஓஆர்ஜீ சமீபகாலமாக சிலவற்றினை தவிர்கின்றதோ? எனும் கேள்வி என்னுள் உண்டு.
விடியலின் முதல் தரிசனமான ஓஆர்ஜீ, எம்மவரின் கலை, இலக்கியப் படைப்புக்களை தனது பக்கத்தில் நிரந்தர அங்கமாக பதிய வேண்டும். புதிய செய்தியாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், புகைப்படக்கலைஞர்கள், ஓவியர்கள் இன்னும் பல்கலை விற்பன்னர்கள், வல்வையைச் சார்ந்தோர் உலகெங்கும் வாழ்கிறார்கள், இவர்கட்கு இங்குள்ள தளத்தில் இடம் கொடுத்து அனைவரையும் உலகிற்கு அறிமுகம் செய்வதோடு அவர்தம் புகழ் ஊரிற்கும் உலகிற்கும் அறிய வழிசமைக்க வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.