10 ஆவது வருடத்தில் வல்வெட்டித்துறை.ORG - வல்வை தொண்டைமானாறு இணையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2021 (திங்கட்கிழமை)
தொண்டைமானாறும் வல்வெட்டித்துறையும் ஒரே நகரசபைக்கு உட்பட்டிருப்பதாலும், வல்வெட்டித்துறை என்றால் தொண்டைமானாறு மக்களுக்கும், தொண்டைமானாறு என்றால் வல்வெட்டித்துறை மக்களுக்கும் ஓர் பாசப்பிணைப்பு தொன்றுதொட்டுக் காணப்படுகிறது.
அமரர். வீரகத்திப்பிள்ளையின் கப்பலைத் தயாரித்தவர்கள், கப்பல் மாலுமிகள் தொடங்கி நீச்சல்வீரர் நவரத்தினசாமி, விளையாட்டுத்துறை, கடற்தொழில், கல்வி, அரசியல், செல்வச் சந்நிதி கோயில், VTA தொழிற்பயிற்சி நிலையம், ஆனந்த யோகாலயா என பல்வேறுபட்ட செயற்பாடுகளுடன் இவை இணைந்துள்ளன.
கலைகள், அறநெறிப்பாடசாலை, யோகாசனம், சமூகசேவைகள், பசுமை அகம் என எமது தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் மற்றும் பல தொண்டைமானாறு சார்ந்த நிகழ்வுகளையும் ஆவணங்களையும் உலகறியச்செய்வதில் Valvettithurai. Org முன்நிற்கின்றது என்றால் மிகையாகாது.
அத்துடன் எம் முயற்சிகளைமுன்னெடுப்பதிற்கு பக்கபலமாகவும் ஆலோசனை வழங்குவதிலும் வல்வை மக்கள் உதவிபுரிகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Valvettithurai.ORG என்ற சமூக வலைத்தளம் சர்வதேசம் எங்கும் வாழும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அவர்களின் சேவை மென்மேலும் பலமடையவும் வளரவும் மனமார வாழ்த்தி நிற்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.