பத்தாவது ஆண்டில் கால்பதிக்கும் Valvettithurai.ORG இணையத்தளம்
நூற்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களை நான் வடிவமைத்து கொடுத்துள்ளேன், ஆனால் ஒரு சில இணையதளங்கள் மட்டுமே பத்தாவது ஆண்டிலும் ஒரு தளர்வும் இன்றி, முதல் ஆண்டு போல் இன்றும் வெகு நேர்த்தியாக பதிவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த இணையத்தளத்தில் முக்கிய பங்குவகிப்பவர் எனது நீண்ட கால நண்பர். சிறந்ததொரு ஊர்த்தளம் ஒன்றை வடிவமைத்து அதனை தளர்வின்றி இயக்க வேண்டும் எனும் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப, Valvettithurai.ORG என்னும் இத் தளம், கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி என்னால் வடிவமைத்து கொடுக்கப்பட்டது.
என்னால் வடிவமைக்கப்பட்ட இணையத்தளங்களில் Valvettithurai.ORG இணையத்தளமும் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு இணையதளமாகும், இந்த இணையத்தளத்தின் வெற்றி என்பது பத்தாவது ஆண்டிலும் ஒரு தளர்வும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுக்கு மேற்பட்ட "வல்வெட்டித்துறை" சார்ந்த செய்திகளை வெகு நேர்த்தியாக தொடர்ந்து பதிவேற்றிக்கொண்டிருப்பதாகும்.
செய்திகள் மட்டுமின்றி "வல்வெட்டித்துறை" சார்ந்த பல்வேறு தகவல்களும் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. நாட்காட்டி தொடுப்பிலிருந்து விரத நாட்கள், இலங்கையில் உள்ள பல பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நாட்கள் என்பன மிகவும் பயனுள்ளன. இப்படி ஒவ்வொரு தொடுப்புக்களும் மிகவும் பயனுள்ளவையாகும்.
தொடர்ந்து இந்த இணையத்தளம் இன்னும் பல ஆண்டுகள் தனது சேவையினை வழங்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
இந்த இணையத்தளத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ந. செல்வகுமார் (B.Sc, University of Colombo)
(Tech Lead, Senior Software Engineer) Freelancer & Part time lecturer at NCL http://www.nselva.com/
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.