வல்வை சிதம்பரக் கல்லூரி இந்துமன்றத்தின் ஏற்பாட்டில் வாணிவிழா நிகழ்ச்சிகள் நேற்று இந்துமன்றத் தலைவர் செல்வி வி. டிலக்சியா தலைமையில் இடம்பெற்றது.
வழிபாடுகளை அடுத்து இடம்பெற்ற நிகழ்வுகளில் கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்கள் ஆசியுரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய ஆசிரிய வளவாளர் திரு சி. குகதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்து வாணி விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் நடனம், பேச்சு, பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன. இந்துமன்றச் செயலாளர் செல்வன் ச.நிதுசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பரிசில்களுக்கான அனுசரனையை கல்லூரியின் பழைய மாணவியும் இலண்டனில் வசிப்பவருமான செல்வி தர்சிகாவின் பெற்றோர் வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.