உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2023 (வெள்ளிக்கிழமை)
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நாசி (மூக்கு) வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மருந்துக்கு 'இன்கோவேக்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்ததை தொடர்ந்து, இந்திய குடியரசு தினமான நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தனர்.
இந்த மருந்து இந்திய நாணயத்தில் , அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.