ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் வசித்து வரும் எட்டு வயது டினோடென்டா என்னும் சிறுவன் சிங்கம் மற்றும் யானை போன்ற விலங்குகள் உள்ள தேசிய பூங்கா ஒன்றுக்குள் வழிதவறி சென்று 5 நாட்கள் பின் பத்திரமாக மீண்டுள்ளான்.
வன விலங்குகள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் அவனது பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். வன ஊழியர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் காணாமல் போன சிறுவன் டினோடென்டா சுமார் 50 கி.மீ தூரம் தள்ளி ஐந்து நாட்கள் கழித்து நலமுடன் மீட்கப்பட்டார். பழங்களை உண்டும் குச்சியால் வறண்ட ஆற்றின் கரையோரம் குழி தோண்டி தண்ணீர் குடித்து ஐந்து நாட்களை கழித்து இருக்கிறான். அவனது பெற்றோரிடம் வன ஊழியர்கள் அவனை பத்திரமாக ஒப்படைத்தனர். உண்மையான Man Vs wild சம்பவக்காரன் சிறுவன் டினோ டென்டா தான் என அந்த நாட்டு ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.