மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மார்கழித் திருவெம்பாவை
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை வேண்டி திருவெம்பாவை விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
திருவெம்பாவை விரதத்தை இந்துக்கள், மார்கழி மாதத்தில் நிகழும் திருவாதிரை தினத்துக்கு ஒன்பது நாட்கள் முன்னர் விரதத்தை ஆரம்பித்து, பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வது வழமை. அதாவது மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் தினங்கள் திருவெம்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று சிவன் கோயில்களில் நடராஜர் திருக்கூத்து இடம்பெறுவது வழமையானவொன்றாகும்.
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி
1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1
தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே !
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!
மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.
2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2
தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !
போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.
3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.