Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..

பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..இன்னும் 2500 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்க வேண்டும் .
 
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்னும் 16 கிராமசேவையாளர் பிரிவு பகுதியளவிலும் மூன்று கிராமசேவையாளர் பிரிவு முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
 
அதாவது ஜே/226 நகுலேஸ்வரம்,ஜே/233 காங்கேசன்துறை மேற்கு, ஜே/234 காங்கேசன்துறை மத்தி,ஜே/238 கட்டுவன்,ஜே/240 தென்மயிலை,ஜே/242 குரம்பசிட்டி,ஜே/243 குரும்பசிட்டி கிழக்கு,ஜே/244 வசாவிளான் கிழக்கு,ஜே/245 வசாவிளான் மேற்கு,ஜே/246 மயிலீட்டி வடக்கு,ஜெ/249 தையிட்டி வடக்கு,ஜே/250 தையீட்டி தெற்கு, ஜே/251 மயிலீட்டிதுறை வடக்கு,ஜே/252 பலாலி தெற்கு,ஜே/253 பலாலி கிழக்கு,ஜே/254 பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவு பகுதியளவிலும் ஜே/248 மயிலிட்டி தெற்கு, ஜே /255, பலாலி வடமேற்கு, ஜே/256 பலாலி மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவு முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
 
இதன் பிரகாரம் கிட்டத்தட்ட 2500 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
 
அத்துடன் வலி.வடக்கையும் வலி.கிழக்கையும் இணைக்கின்றதும், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையான வல்லை – அராலி வீதியில் வசாவிளான் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான 2-1/2 கிலேமீற்றர் பிரதான பாதை விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
 
மேலும் பலாலி மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமான பலாலி வீதியானது வயாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான 3-1/2 கிலோமீற்றர் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதோடு மக்களின் யாழ்ப்பாணத்தின் பிரதான மார்க்கமாக இருக்கின்ற பருத்திதுறை – பென்னாலை வீதியின் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கீரிமலை கிருஷ்ணன் கோவில் வரையான ஒரு கிலோமீற்றர் தூரம்  விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
 
இவ்வாறான நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட பலாலி வீதியின் கிழக்கு பகுதியான ஒரு பகுதி 235 ஏக்கர் விடுவிக்கப்பட்ட போதும் கடந்த மே முதல் அப்பகுதிக்கு மக்கள் சென்று வரக் கூடிய நிலைமை ஏற்பட்டது. 
 
எனினும் இன்று வரை குறிப்பாக புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் கூட இராணுவ உயர் பாதுகாப்பு வேலி அகற்றப்படாதுள்ளது. இதற்கு காரணம் இராணும் அவ்வேலியை அகற்றுவதற்கு அரச நிர்வாகத்திடம் 18 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதியினை கோரி நிற்கின்றது. இதனால் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு இருந்த போதிலும் மக்கள் அக்காணிகளில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது இருக்கின்றனர்.  
 
அதாவது அக்காணிகளில் அபிவிருத்தி மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட முடியாது பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாத நிலைமையே காணப்படுகின்றது.
 
இது இவ்வாறிருக்க 2013 அம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி 6371 ஏக்கர் இராணுவ தேவைக்கு சுவிகரிப்பதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்ட போதும் அவற்றுக்கு எதிராக வலி.வடக்கு மக்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2176 காணி உரிமையாளர்களின் பேரில் வழக்கு தாக்கல் மேற்கொண்டிருந்தார். அவ்வழக்கு தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
 
இதன் அடிப்படையில் 3000 ஏக்கருக்கு மேல் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2023 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் நடத்திய கூட்டத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு காணி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அறிவித்தல் வழங்கியும் அது ரத்துச் செய்யப்படாமலுள்ளது. எனவே, புதிய அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென வலி.வடக்கு மக்கள் சார்பில் கோருகின்றேன்.
 
அத்துடன், மீள்குடியேற்றத்துக்கு தேவையான நிதிகள் போதுமானதாக விடுவிக்கப்படாத நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தேக்க நிலையை அடைந்துள்ளது.
 
குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பலாலி வடக்கு மக்கள் (கிறிஸ்தவ நகர்) தங்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கடற் இறங்குதுறை இல்லாமல் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.அது போன்று மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பு கூடிய துறைகளுக்கு கூடிய நிதி ஒதுக்கீடுகளை புதிய அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
 
புதிய அரசாங்கம் மக்களுடைய காணிகளை கடந்த கால அரசாங்கம் போல் தேர்தல் வாக்குறுதியாக காணிவிக்கப்படுமென கூறிய  போதும் அண்மையில், தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு செயலாளர் இக்காணிகள் தமது அரசாங்கத்தின் 5 வருட ஆட்சிக் காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுமென கூறி மக்களின் நம்பிக்கையை சிதைவடையச் செய்துள்ளார்.
 
இதனை நம்பி தாங்கள் மீள்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தொடர்ந்து தமது அல்லல்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 
ஏனவே அம்மக்களுடைய வாழ்வில் ஒளிக்கீற்று வீசுவதற்காக இராணு முகாம்கள் அல்லாத பல ஏக்கர் காணிகளில் இராணுவத்தால் விவசாயம்,வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலங்களை உடனடியாக விடுவித்து மக்களின்மீள்குடியேற்றத்தை துரிப்படுத்து வேண்டும்.
 
குறிப்பாக தையிட்டி வடக்கில் மக்கள் தொடர்ச்சியாக 35 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெயந்து வாழும் நிலையில் உள்ளனர்.அங்கிருந்த பெண்கள் இராணுவ முகாம் அகற்றப்பட்ட போதும் இராணுவம் வர்த்தக கடைகளை நடத்தி வருகின்றது.
 
இக்காணிகள் முன்னர் விடுவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இப்போதும் இராணுவம் வர்த்தக நடவக்கையில் ஈடுபடுவதால் தையீட்டி மக்கள் விரக்தியுற்று காணப்படுகின்றனர்.
 
வலி.வடக்கு முன்னாள்
பிரதேச சபை தவிசாளர்
சோமசுந்தரம் சுகிர்தன்.
 
(யாழ் தினக்குரல் -08.12.2024)
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - மூன்றாவது இடத்தைப் பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - முதலாவது, இரண்டாவது இடங்களை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
முதன் முறையாக நூறைத் தாண்டிய பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
Valvettithutai annual kite festival 2025 commences, Amid drizzling
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மழைத் தூறல்களுக்கு மத்தியில், வல்வை பட்டப்போட்டி 2025 ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வைய முதல் மாந்தர் வருடம் பிறக்கிது தையினிலே.!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
பொலநறுவை சிவன் கோயிலில் திருவெண்பாவை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இன்று திருவாரை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இம்முறை பட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ள பொம்மலாட்ட நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
புதிய திருவள்ளுவர் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளம்பரம் - Lakyaa Creation
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் - 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறையில் புதிய மரக்கறி சந்தை திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நீலாம்பிகை இரத்தினசோதி (நீலா)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
இன்று வைகுண்ட ஏகாதசி விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
அவுஸ்ரேலியா - வல்வை நலன் புரிச்சங்கத்தின் கோடைக்கால ஒன்றுகூடல் பிற்போடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வை பட்டப் போட்டித் திருவிழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2025 (வியாழக்கிழமை)
இன்றைய நாளில் - 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும் வல்வையிலிருந்து அன்னபூரணி பவனியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2025 (வியாழக்கிழமை)
டொல்பின்கள் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2025 (புதன்கிழமை)
யாழில் 15 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா கோடைக்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2021>>>
SunMonTueWedThuFriSat
 1
2
3
4
5
6
7
8
9
10
111213
1415
16
17
18
19
20
2122
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai