93 ஆம் ஆண்டு தீருவிலில் மாவீரர்கள் ஞாபகார்த்தமாக மாபெரும் வீரசாகசங்கள் மற்றும் தற்காப்புக்கலை சார்ந்த நிகழ்வு போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. இது போன்றதொரு நிகழ்வு வல்வையில் அதற்குப் பின்னர் இதுவரை இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
தற்காப்புக் கலை சார்பாக இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் நானும் பங்கு கொண்டு பதக்கம் ஒன்றைப் பெற்றிருந்தேன்.
போட்டியில் நடுவார்களாக பங்கேற்றவர்களில் ஒருவர் அமரர் கலாபூஷணம் சிவலிங்கம் அவர்களும் ஒருவர். (படத்தில் கைமேல் தலையைச் சாய்த்த வண்ணம் காணப்படுகின்றார்) போட்டி முடிவுற்ற பின்னர் என்னை அழைத்துப் பாராட்டியிருந்தார். தொடர்ந்து சிவலிங்கம் அவர்களிடம் தற்காப்புக்கலை பயில ஆர்வமாகயிருந்தது. ஆனாலும் கால்கள் கப்பலில் தடம் பதித்து விட்டன. சந்தர்ப்பம் அமையவில்லை.
வல்வை முத்துமாரியம்மன் கோயிலில் அடியவர்கள் எமக்கு நினைவில் வரும் முகங்களில் - சிலவற்றில் ஒன்று சிவலிங்கம் அவர்களின் முகம்.
………………………….. வல்வை முத்துமாரி...................................... வல்வை முத்து மாரி...... என சிவலிங்கம் அவர்கள் உடுக்கு எடுத்து உரத்துப் பாடுவது சிறப்பு. மிகச் சிறந்த பல்கலை கலைஞர் இவர்.
எனது பக்கங்கள் எழுது ஆரம்பிக்க முன்னர் சிலரிடம் சென்று சில தகவல்கள் பெற்றேன்.
பலரிடம் பின்னர் வந்து தகவல்கள் சேகரிப்பதாகக் கூறியிருந்தேன். அவர்களில் ஒருவர் அமரர் சிவலிங்கமும் ஒருவர்.
அவர் பற்றிய எனது பக்கம் முழுமையாகமால் போவதில் வருத்தம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.