வங்காள விரிகுடாவில் புயலாக மாறும் தீவிர தாழமுக்கம், Michaung எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2023 (சனிக்கிழமை)
பருத்திதுறைக்கு வட கிழக்காக சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில், மேற்கு வட மேற்குத் திசையில் நகரந்து வரும் தீவிர தாழமுக்கம் (Deep depression) காரணமாக இலங்கையின் வட பகுதியில் கடந்த தினங்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
குறித்த தீவிர தாழமுக்கம் (Deep depression) ஆனது இன்னும் சில மணி நேரங்களில் (Cyclonic storm) மாறும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த புயலுக்கு Michaung (மிக்ஜங்க், மிக்ஜம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புயலானது எதிர்வரும் 4 ஆம் திகதி வடக்கு திடையில் நகர்ந்து, 5 ஆம் திகதி ஆந்திர பிரதேசத்தின் தெற்கு கடல் பிரதேசதத்தின் நெல்லூர் மற்றும் மச்சிலிபட்டிணத்தை கடக்கும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.