யாழ் மருத்துவ சங்கம், வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மற்றும் கணபதி மகால் ஆகியன இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று (24.10.2026) சனிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.
நெடியகாட்டிலுள்ள கணபதி மகால் திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இம்முகாம் நடைபெறும்.
பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், சத்திரசிகிச்சை, தோல் மருத்துவம், பெண்நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் சேவைகள் இம்முகாமில் வழங்கப்படவுள்ளன.
இதன்போது இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், தேவையான குருதிப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் கலந்துகொள்வோர் தங்களது மருத்துவக் கிளினிக் புத்தகங்கள் மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இருப்பின் அவற்றையும் தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.