Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இன்றைய நாளில் - ஆங்கிலக் கால்வாயில் மரணித்த ஆழிக்குமரன் ஆனந்தன்

பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2024 (செவ்வாய்க்கிழமை)
“ஆழிக்குமரன் ஆனந்தன்”  எனும் புகழ் வாய்ந்த அடைமொழியால் அறியப்படுகின்ற வல்வெட்டித்துறைக்கும் இலங்கைத் திருநாட்டிற்கும் உலகத்தமிழருக்கும் அழியாப்புகழ் தேடித்தந்த சாதனை வீரன் விவேகானந்தன்  செல்வகுமார் ஆனந்தன் (V.S.C ANANTHAN) அவர்கள் மரணித்த தினமான ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து இவ்வாக்கம் வெளியிடப்படுகின்றது.
 
இங்கு வெளியிடப்படும் தகவல்களில் பல ஆனந்தன் அவர்களின் பல்கலைக்கழக  நண்பரும் இலங்கை  வங்கியில் எனது முகாமையாளராக கடமை புரிந்தவருமாகிய திரு முகமது  ஜலீல் என்பவரது கட்டுரையிலிருந்தும் புகழ்பூத்த பத்திரிகை ஆசிரியர் திரு இராஜகோபால் அவர்களது “ஆழிக்குமரன்” என்ற நூலிருந்தும் பெறப்பட்டவையாகும். அத்துடன் சாதனை வீரரது அன்னை இராஜரத்தினம் அம்மாள் அவர்களது அந்தியேட்டி நினைவு மலரில் இருந்தும் சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
 
 
1962 ஆம் ஆண்டு எனக்கு 12 வயதாக இருக்கும் போது நான் பெற்றோருடன்  வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் வசித்து வந்தேன். எனது அக்காவின் கணவர் திரு பொன்னுத்துரை தனபாலசிங்கம் ஆனந்தனின் நண்பர் ஆவார். அவர் என்னை ஜோன்சன்  வெளியினை யந்திரம் (அப்போதுதான் முதன்முதலில் இங்கு அறிமுகமான காலமென எண்ணுகிறேன்)  பொருத்திய கட்டுமரத்தில் எரிபொருள் கொள்கலன் வைக்கும் மரப் பெட்டிக்கு மேல் உட்கார வைத்தார். அத்துடன் கையில் ஒரு கண்ணாடி குழாயையூம் தந்தார்.
 
முருகைக் கட்டிற்கு வெளியிலே சுமார் 500 மீட்டர் தூரமளவில் எமது கட்டுமரம் எனது அத்தானுடனும் மற்றும் அவரது இரு நண்பர்களுடனும் மெதுவாக செலுத்தப்பட்ட வண்ணம் இருந்தது. மைத்துனர் ‘இந்த அண்ணா எப்பொழுதெல்லாம் சைகை மூலம் உன்னைக் கேட்கின்றாரோ அப்பொழுதெல்லாம் இந்த பைப்பை அவரிடம் நீட்ட வேண்டும் என்றும் பணித்தார்.
 
ஆனந்தன் எனும் கட்டிலம் காளையை நான் முதலில் கண்டது உடல் முழுவதும் (கொழுப்பு) கிறீஸ் பூசியபடி நீரில் நீந்திய பொழுது தான் அன்றைய பயிற்சி ஆதிகோவிலடிக் கடலிருந்து நாகர்கோவில் வரை சென்று திரும்பி வருவதாக இருந்தது.
 
நானும் மிக ஆர்வத்துடன் அவர் கேட்கும் போதெல்லாம் ஒருவகை திரவத்தை (இளநீர் போன்றது) அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டிய வண்ணம் இருந்தேன். இடையில் அவருக்கு கொடுப்பதற்கு குளுக்கோஸ் போன்ற பெட்டியிலிருந்து எடுத்து சீனி போன்ற மெல்லிய பவுடரிலிருந்து பானம் தயாரிப்பதைப் பார்த்து எனக்கு வாயூறியது.
 
எனவே இவர்கள் கவனிக்காத போது அந்தப் பவுடரில் ஒரு பிடி எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல அது குளுக்கோசாக தெரியவில்லை, உச்சக்கட்ட இனிப்பாக இருந்தது. பின்னர்தான் நான் அது “Saccharin” எனும் பலமடங்கு குளுக்கோசின் சக்தியை உள்ளடக்கிய சகரீன் பவுடர் என்று அறிந்து கொண்டேன்.
 
இந்நிகழ்வு என் மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இவ்வாறு ஆனந்தன் நாகர்கோயில் கடல்வரை சென்று மீண்டு பயிற்சியெடுத்ததற்கு எனது சிறிய பங்களிப்பும் அதாவது “இராமர் அணை கட்ட அணில் பங்களிப்பு செய்தது போல” இருந்தது என்பதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது.
 
ஆனால் 20 வயதில் இப்படி ஆரம்பித்த ஆழிக்குமரன் ஆனந்தனின் இச்சிறிய சாதனை விழுதாக இருந்து பெரிய ஆலமரமாகுமென்பதை அப்போ நான் கிஞ்சித்தும் யோசித்திருக்கவில்லை.
 
இவரது சாதனைகள் ஏனோ பலருக்கு தெரியாமலும் உலகத்தின் கண்களுக்கு புலப்படாமலும் இருப்பது வியப்பாகவே உள்ளது. சமகாலத்தில் படைக்கப்படும் சாதனைகளுக்கு உடனுக்குடன் நவீன தொடர்பாடல்கள் மூலம் எவ்வளவு விளம்பரங்கள் கிடைக்கின்றன?
 
ஆனால் உலகில்  எந்த ஒரு தனி மனிதனாலும் இதுவரை சாதிக்கப்படாத, கின்னஸ் பதிவுகள் ஏற்படுத்துவதிலேயே கின்னஸ் சாதனை புரிந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகள் அதாவது வல்வெட்டித்துறை மண்ணுக்கு மட்டுமல்லாது அனைத்து தமிழினத்துக்கும் பெருமை தேடித்தந்தவரை இன்று நினைவு கூருவோமாக…….
 
ஆழிக்குமரன் பற்றிய சில சிறுகுறிப்புக்கள்
 
 
பெயர்-  திரு. விவேகனந்தன் செல்வகுமார் ஆனந்தன் 
பிறப்பு - மே மாதம் 25ம் திகதி 1943 - வல்வெட்டித்துறை
தந்தை - திரு. விவேகானந்தன் (பொறியியலாளர்)
தாய் - ராஜரத்தினம் அம்மாள்
சகோதரர்கள்  - 09 (ஒன்பது பேர்)
மனைவி  - மானில் (சிங்கள மாது)- (இரு பிள்ளைகள்)
மகன் - Vice president & Managing Director of Google -South East Asia & India.
புகழ் பெற்ற சகோதரி - ரங்கமணி (இவர் ரங்கா என்ற பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற குச்சுப்புடி நாட்டியத்துறை நாயகி) 
இறப்பு - ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது.
திகதி - 06 . 08 . 1984 (41 வது வயதில்)
 
ஆனந்தன் சர்வகலாசலையில் ஒரு பிரபல சோசலிசவாதியாக வாழ்ந்தார். மனிதனை மனிதன் சுரண்டும் ஒரு சமூக அமைப்பை அறவே வெறுத்து தமிழ் முஸ்லிம் சிங்கள ஒற்றுமைக்கும் ஒரு தேசிய பாலத்தை கட்டியமைக்க கனவு கண்டார். இவரை நிச்சயம் அரசு ஒரு தேசிய வீரனாக பிரகடனப்படுத்தி தனக்கு பெருமை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இற்றை வரை இது இடம்பெறாது துர்ப்பாக்கியமே.
 
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1961- 1964 இல் சட்டக்கல்வி பயிலும் போது முழு பேராதனை வளாகத்திலும் ஒரு கதாநாயகனாக விளங்கினார். ஆனந்தன் என்ற சாதனை வீரனை மனித நேயத்துக்கு இலக்கணமானவரை துணிச்சலுக்கு பெயர் பெற்றவரை மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவரை விளையாட்டு வீரனை ஆடல் அழகனை பாடுவதில் வல்லவனை விவாத அரங்குகளில் எதிர்ப்பக்கத்தில் உள்ளவர்களை பந்தாடுபவரை  எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற இரக்க சிந்தனை கொண்டவரை நட்புக்கு மயமானவரை பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியார்கள் ஊழியர்கள் , பல்துறைகளையும் சார்ந்த அனைத்து பல்கலைக்கழக சமுதாயமும் அறிந்திருந்தது மட்டுமல்லாது மதித்து போற்றியும் இருந்தது.
 
இலங்கையின் புகழ்பெற்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் 17 வயது மாணவனாக 1961ஆம் ஆண்டில் நுழைந்து சட்டக்கல்வி பயின்றார். பல்கலைக்கழக மாணவனாக இருந்த பொழுது இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்குநீரிணையை நீந்திக்கடந்தார். பின்பு பாக்கு நீரிணையை அங்கும் இங்குமாக ஒரே முறையில் நீந்திக் கடந்து உலக சாதனையை நிலை நாட்டினார். (தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும், தனுஷ் கோடியிலிருந்து இருந்து தலைமன்னாருக்கும் நீந்திய சாதனைதான் இது.)
 
சட்டத்தரணியாக காலஞ்சென்ற பிரதம நீதியரசர் சர்வானந்தாவுடன் அவருடைய ஜூனியராக பணியாற்றினார். சட்டத்தரணியாக வழக்கு மன்றங்களுக்கு செல்வதைவிட பல சாதனைகளை நிலை நாட்டி தமிழ் இனத்துக்கும் பிறந்த இலங்கை மண்ணுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்பதே அவருடைய ஒரே அவாவாக இருந்தது.
 
தலைநகர் கொழும்பில் 1979ம் ஆண்டில் 187 மணிநேரம் இடைவிடாது 1487 மைல்கள் சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்து வெற்றி வீரனாகினார்.
இதே 1979ம் ஆண்டில் கொழும்பில் 136 மணிநேரம் தொடர்ச்சியாக போல் பங்சிங் (Ball Punching) செய்து உலக சாதனை புரிந்தார்.
1980ம் ஆண்டில் 33 மணிநேரம் ஒற்றைக்காலில் அசையாமல் நின்று உலக சாதனை படைத்தார். 
இரு நிமிடங்களில் 165 தடவைகள் இருந்து எழும்பி மற்றொரு சாதனை படைத்தார். 
(High Kicks) என்ற மற்றும் ஒரு உலக சாதனையை 1980 டிசம்பரில் 9100 தடவைகள் செய்து பெருமை தேடித் தந்தார்.
இலங்கைக்கு வெளியே உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆவல் எழ இந்திய, தமிழ் நாட்டில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ச்சியாக 80 மணிநேரம் தவளையைப்போல் வாழ்ந்து (Treading in water) தமிழக மண்ணில் 1981ம் ஆண்டு ஜுலை மாதம் உலக சாதனையைப்  படைத்தார். 
 
இதுபோல இவரது ஏழு சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
 
சாதனைகள் பலபுரிந்து தமிழனின் ஆற்றல் உலக வரலாற்றில் பதியப்பட வேண்டும் என்று அவாக்கொண்டார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறாவிட்டாலும் 1978இல் கொழும்பில் டுவிஸ்ட் நடனம் 128 மணிநேரம் இடைவிடாது ஆடி இலங்கை மக்களின் இலட்சணக்கான இதயங்களில் இடம்பெற்றார்.
 
பின்பு 70 இறாத்தல் எடையுள்ள இரும்பை இடைவிடாது 2000 தடவைகள் கீழேயிருந்து மேலே தூக்கி பெருமை சேர்த்தார். மீண்டும் தமிழக மண்ணில் சென்னை வீதிகளில் 149 மணிநேரம் தொடர்ச்சியாக நடந்து தமிழக மக்களின் இதயங்களில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்தார்.
 
யாழ்ப்பாண மண்ணிலே ஒரு சாதனை நிலைநாட்ட விரும்பி 1983ம் ஆண்டு 22 அவுன்ஸ் பிலியட் பொல்லை 2520 தடவைகள் உயர்த்தி ஒரு சாதனையை நிறுவினார்.
 
மீண்டும் ஒற்றைக்காலில் 130 இறாத்தல் இரும்பை தோளில் சுமந்து கொண்டு நிற்கும் ஒரு சாதனை படைத்தார். எந்த சாதனை  படைப்பதற்கும் அவர் தயங்குவதே இல்லை. ஆழிக்குமரனின் சாதனைகள் -
 
1.  கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் இடம் பெற்றவை - 07 
(விபரம் - ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது - இதுவே இன்னொரு உலகசாதனை)
 
2.  கின்னஸ் புத்தகத்தில் பதியப்படக் கூடிய அளவு தரமானவை ஆனால் ஏற்கப்படாதவை (04) நான்கு -  (விபரம் இணைக்கப்பட்டுள்ளது)
 
3.  ஒரே நாளில் ஒற்றைக்காலில் 33 மணிநேரம் நின்றும், 2 நிமிடங்களில் 165 தடவைகள் இருந்து எழும்பியும் இதுசாதனைகளைப் புரிந்ததும் இன்னொரு சாதனையாகும். 
 
4.  மொத்தமாக 20 - 25 சாதனைகள் புரிந்துள்ளார்
 
தொகுப்பு
அமரர் ந.சிவரட்ணம்
(வல்லை ஜெயம்)

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 1994>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai