வட்டுவாகல் உறவுகளுடன், பிரான்ஸ் ஒன்றியமும் இணைந்து நடாத்தும் , மாபெரும் பட்டத் திருவிழா நாளை 19.01.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு கடற்கரையில் கோலாகலமாக இடம்பெறவுள்ள்ளது.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு ரவிகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க இருக்கிறார்.
சிறப்பு விருந்தினராக மேலதிக அரச அதிபர் திரு சி.குணபாலன் அவர்கள்(மாவட்டச் செயலகம்,முல்லைத்தீவு)கலந்து கொள்வார்.
கௌரவ விருந்தினர் திருமதி ஜெ.இராசயோகினி (செயலாளர் பிரதேச சபை ,முல்லைத்தீவு) கலந்து சிறப்பிக்க இருக்கிறார். இந்நிகழ்வில் முந்நூறுக்கு மேற்பட்ட பட்டங்கள் ஏற்றப்படவுள்ளன.
அண்மையில் வல்வெட்டித்துறை கடற்கரையில் ஏற்றப்பட்ட முப்பரிமாண பட்டங்களும் இங்கே வானத்தை அலங்கரிக்க இருக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.