காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2024 (திங்கட்கிழமை)
காங்கேசன்துறைக்கும்- நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதில் சிவகங்கை (சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் முன்னர் கடந்த ஆண்டு இறுதியில் சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் சேவையில் ஈடுபடாது.
150 பயணிகள் இந்தப் படகில் பயணிக்கமுடியும் என்பதுடன், ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்ல முடியும். வாரம் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.
ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர் ஆகும் என தெரிவிக்கப் படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.